அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!!

8aa660e1 f4d54757 person registration

அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!!

நாளை முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்க தினங்களில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு அந்தத் தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ தபால் ஊடாக அவர்களது விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களை இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version