அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்!- இராணுவத் தளபதி
எதிர்வரும் சில நாள்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி பொது ஊழியர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையாளர்களைத் தவிர வேறு எவரையும் பணியில் சேர்க்க வேண்டாம் என்றும் இராணுவத் தளபதி அறிவுறுத்தினார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் எனவும் இன்று நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு அனுமதி இல்லை எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.