வீட்டிலேயே செய்யலாம் கிளி பரோட்டா

ezgif 5 a9f79e7907

சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார்.

இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.

தேவையான பொருட்கள்

வெஜிடபிள் சால்னா – 2 கப்

பரோட்டா – 2

வாழை இலை – 1

நறுக்கிய வெங்காயம் – 1

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.

பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.

இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பின்பு அதன் மேல் மீண்டும் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.

இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.

இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழை இலை கிளி பரோட்டா தயார்.

#LifeStyle

Exit mobile version