பேயாக மிரட்டும் யாஷிகா ஆனந்த்!

download 10 1 7

பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைத்ரா’. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. ‘சைத்ரா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

Exit mobile version