7ad514f0be
சினிமாபொழுதுபோக்கு

விராட் கோலி வாழ்க்கை கதையில் விஜய் தேவரகொண்டா?

Share

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தவரிசையில் விராட் கோலி வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் விராட் கோலி பாத்திரத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் துபாய் சென்ற விஜய் தேவரகொண்டாவிடம் நீங்கள் எந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து விஜய் தேவரகொண்டா கூறும்போது, ”கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஏற்கனவே நடித்து விட்டார். எனக்கு விராட் கோலி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலியாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இவர் விராட் கோலி வாழ்க்கையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

#vijaydevarakonda #Viratkohli

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...