தளபதிக்கு வில்லனாகும் அர்ஜுன்?

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் வாரிசு. விஜக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நட்ஷத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஸுடன் கைகோர்க்கிறார் விஜய்.

1746318 vi

படம் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்பப்பை தூண்டி வருகின்றன. இந்த நிலையில் விஜய்க்கு இரண்டு கதாநாயகிகள் எனவும், அவர்களில் ஒருவர் த்ரிஷா மற்றவர் சமந்தா எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் என 6 மொழிகளில் எடுக்க திட்டமிட்டு இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளனர். இதேவேளை தமிழில் முன்னணி நடிகரானஆக்சன் கிங் அர்ஜுனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் – லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் இவர்கள் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் வாரிக் குவித்தது. இந்த நிலையில் தளபதி 67 படத்துக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version