கோதுமை ரவை பாயாசம்

1794244 wheat rava payasam

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப்

ஜவ்வரிசி – அரை கப்

தண்ணீர் – 3 கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப்

தேங்காய் பால் – 3 கப்

ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

முந்திரி – விருப்பத்திற்கேற்ப

நெய் – விருப்பத்திற்கேற்ப

செய்முறை

ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

#lifestyle

 

Exit mobile version