பொதுவாக முதுமையை அடையும்போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள்போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.
கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கக்கூடியவை.
எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.
எனவே இவற்றை முடிந்தவரை போக்குவது நல்லது. தற்போது அவற்றை எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காபி தூள் – 1/4 கப்,
- இனிப்பு பாதாம் எண்ணெய் – 1/2 கப்,
- ஆமணக்கு எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு
தேவையானவை
முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள்.
பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள்.
நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள்.
இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.
#beautytips #eyeproblem
Leave a comment