பொதுவாக நம்மில் பலருக்கும், தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றி தான் தெரியாது.
கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டு விட்டு இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும்.
தற்போது இயற்கை முறையில் நிறத்தை அதிகரிக்க சில எளிய அழகு குறிப்புக்களை இங்கே பார்ப்போம்.
- தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்.
- சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
- தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
- இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் சருமம் வெண்மையான தோற்றத்தை பெரும்.
- சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த, தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
#LifeStyle
Leave a comment