சினிமாபொழுதுபோக்கு

39 வயது நடிகைக்கு முடிந்த நிச்சயதார்த்தம்.. மனம் திறந்து பேசிய விஷால்

Share
24 661ca2cfcf071
Share

39 வயது நடிகைக்கு முடிந்த நிச்சயதார்த்தம்.. மனம் திறந்து பேசிய விஷால்

39 வயது நடிகைக்கு முடிந்த நிச்சயதார்த்தம்.. மனம் திறந்து பேசிய விஷால்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் துப்பறிவாளன் 2.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வருகிற 2026 தேர்தலில் களமிறங்குவேன் என விஷால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலும் 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் கூட இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை போகவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே, நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் என பதிலை கூறிவிடுகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஷாலிடம் வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் ” வரலக்ஷ்மியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகிறேன். அவர் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை அமைத்திருக்கிறார். திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு பிறகு ஹனுமான் படத்தில் வரலக்ஷ்மியின் கேரக்டர் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவரை நினைந்து நான் மகிழ்ச்சியாகிறேன். அவருடைய கேரியரை தாண்டி அடுத்த கட்டத்திற்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்” என பேசினார் விஷால்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷாலும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் கைகூடவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதன்பின் தொடர்ந்து தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் வரலக்ஷ்மி. திரையுலகை சேர்ந்த பலரும், வரலட்சுமிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...