ஜனவரி 4ல் ஒளிபரப்பாகிறது ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா! ரசிகர்கள் உற்சாகம்.

jana nayagan audio launch 1767094447

தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.

அண்மையில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஜீ 5 (Zee 5) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தமிழக அரசியலில் கால்பதித்துள்ள விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசித் திரைப்படம் இது என்று கூறப்படுவதால், இப்படத்தைக் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பெரும் திரளாகத் தயாராகி வருகின்றனர். ஒரு உன்னதமான அரசியல் திரில்லராக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version