தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு முன்பதிவு அமோகமாகத் தொடங்கியுள்ளது.
விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளதால், இதுவே அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படமாகும். இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் எதிர்வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், வெளிநாடுகளில் மட்டும் இதுவரை ரூ. 4.2 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால், வரும் நாட்களில் முன்பதிவு மேலும் பல மடங்காக அதிகரிக்கும் எனத் திரைத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்தப் படம், வசூலில் புதிய வரலாற்றுச் சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.