விஜயின் GOAT திரைப்படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்
விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தில் AI மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் ஜெயராம், மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், சிநேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜயின் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், GOAT திரைப்படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை AI மூலம் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி எடுத்து வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரேமலதா, “இயக்குநர் வெங்கட் பிரபு என்னை சந்திக்க 4-5 முறை முயற்சி செய்தார்.
சமீபத்தில் சென்னை சென்ற போது, விஜய்யின் கோட் படத்தில் AI தொழில்நுட்பத்தை வைத்து விஜயகாந்தை நடிக்க வைக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
விஜய்யின் ஆரம்ப காலம் முதலே விஜயகாந்த் மீது அவருக்கு பெரும் மரியாதை உள்ளது. இப்போது விஜயகாந்த் அவர்கள் இருந்தால் விஜய்யின் கோரிக்கையை அவர் மறுத்திருக்கமாட்டார்.
தேர்தல் முடிந்த பிறகு நல்ல செய்தியை சொல்கிறேன் என இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு சொல்லிருக்கிறேன்” என தெரிவித்தார்.