tamilnaadi 142 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

விஜய் கட்சியின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு, எப்போது தெரியுமா?

Share

விஜய் கட்சியின் முதல் பிரம்மாண்ட மாநாடு.. எங்கு, எப்போது தெரியுமா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு 72 மாவட்டங்களும் அதிமுகவுக்கு 82 மாவட்டங்களும் இருக்கும் நிலையில் அதற்கும் அதிகமான மாவட்டங்களை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம், மதுரை மாவட்டத்தில் முதல் மாநாடு நடைபெற போவதாக தகவல் வந்துள்ளது.

இந்த மாநாடு நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடைபெறும் என்று கூறிய நிலையில் மதுரையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 100 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் முடிந்ததும் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...