12 26
சினிமாபொழுதுபோக்கு

விஜய் டிவிக்கு மூடுவிழா.? அதிரடியாக வேறு சேனலுக்கு கைமாறிய பிக்பாஸ் நிகழ்ச்சி

Share

விஜய் டிவிக்கு மூடுவிழா.? அதிரடியாக வேறு சேனலுக்கு கைமாறிய பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசனும், எட்டாவது சீசனை விஜய் சேதுபதியும் தொகுத்து வழங்கி இருந்தனர்.

கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஜனவரி 19ஆம் தேதி உடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், விஜய் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்து வந்த நிலையில், இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.

ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணைந்த நிலையிலேயே இந்த பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விஜய் டிவியை அம்பானியின் லியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் ஹாஸ்டர் ஓடிடி தளம் ஜியோ ஹாஸ்டர்  என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பானிக்கு சொந்தமாகவே கலர்ஸ் என்ற சேனலும் உள்ள நிலையில் விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், அநேகமான  நிகழ்ச்சிகளும் இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கலர்ஸ் தமிழில் பிப்ரவரி 23ஆம் தேதி இருந்து தினசரி ஏழு மணிக்கு இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...