உனக்கு அரசியல் தேவையா!! நன்றி சொல்ல வந்த விஜய்யிடம் இயக்குனர் கேள்வி

24 6606558cee4af

உனக்கு அரசியல் தேவையா!! நன்றி சொல்ல வந்த விஜய்யிடம் இயக்குனர் கேள்வி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

ஆனால் இதுவரை தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என அறிவிப்பு வெளிவரவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்குகிறார் என உறுதியாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

நடிகர் விஜய்யின் பல படங்களுக்கு ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வந்துள்ளது. அப்படி ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத பிரச்சனைகளில் ஒன்று கத்தி படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடந்தது தான்.

திரையுலகில் உள்ள பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். அப்போது இயக்குனர் பாரதிராஜாவின் கத்தி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்க்கு துணையாக இருந்துள்ளாராம்.

படம் ரிலீஸ் ஆனதற்கு முன் பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்று நன்றி கூறியுள்ளார் விஜய். அப்போது ‘விஜய் உனக்கு அரசியல் தேவையா’ என கேட்டாராம் பாரதிராஜா. இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Exit mobile version