tamilni 77 scaled
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி படத்தை இயக்க காத்திருக்கும் 8 இயக்குனர்கள்

Share

விஜய்யின் கடைசி படத்தை இயக்க காத்திருக்கும் 8 இயக்குனர்கள்

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தார். தமிழக அரசியலில் அவர் ஈடுபட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிட்டால் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படமே அவரது கடைசி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தற்போதைய நிலையில் 8 இயக்குனர்கள் காத்திருப்பதாகவும் அவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடைக்கும் என்ற தகவல் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் இதுவரை இயக்குனர்கள் எச் வினோத், வம்சி, அனில் ரவிபுடி, அட்லி, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் ,நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய 8 பேரிடம் கதை கேட்டிருப்பதாகவும் இவர்களில் ஒருவரை அவர் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு கார்த்திக் சுப்புராஜ் அல்லது எச் வினோத் ஆகிய இருவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த இருவரில் ஒருவர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை அம்சமாக இருக்கும் என்றும் அவர் 2026 ஆம் ஆண்டு மாஸாக அரசியலுக்கு நுழைவதற்கு ஏற்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...