பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லைகர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
இந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா ஒட்டு துணி இல்லாமல் கையில் ஒரு பூங்கொத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிற்கும் போஸ் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
‘பிகே’ படத்தில் அமீர்கான் நடித்த கேரக்டர் போல் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். மணிஷர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
#CinemaNews