நடிகை ராஷ்மிகா மற்றும் அவரது காதலர் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது. அந்தச் செய்தியை அவர்களும் மறுக்கவில்லை.
அடுத்த வருடம் பிப்ரவரியில் அவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் முடிந்து 3 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா திடீரென விபத்தில் சிக்கி இருக்கிறார்.
தெலுங்கானாவின் உண்டவல்லி என்ற இடத்தில் விஜய் தேவரகொண்டாவின் கார் மீது மற்றொரு கார் மோதி இருக்கிறது. அதிஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் பற்றி பதிவிட்ட விஜய் தேவரகொண்டா, விபத்தில் சிக்கிய பின் நன்றாக இருந்தாலும், தனது தலை வலிப்பதாக கூறி இருக்கிறார்.