சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய்! எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான் .

இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இப்படம் ஜூன் 2-ம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

தற்போது படத்தில் நடிகர் விஜய் சம்பளமே இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த காட்சிகள் ஒரேநாளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தி விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

jawaan movie poster 2

#CinemaNews

Exit mobile version