விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்க தலைவர் என்பவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் செயற்கை கருத்தரிப்பு முறையை கடைபிடிக்க முடியும் என்றும் ஆனால் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும் இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளதால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது தெரியவில்லை.
#Vigneshsivan #Nayanthara