சினிமாபொழுதுபோக்கு

பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா.. பயில்வானுக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்

Share
6 7
Share

பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா.. பயில்வானுக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நான்கு வருடங்கள் நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் டிவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பட்டும் அதில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு அதே நிறுவனம் மூலமாக சன் டிவியின் டாப் குக் டூப் குக் என்ற ஷோவை வெங்கடேஷ் பட் நடத்தினார். அது சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெங்கடேஷ் பட் பற்றி அவதூறாக பேசி இருக்கிறாராம். அவர் பல கோடி சம்பளமாக கேட்டார் என்றும், அதற்கு விஜய் டிவி ஒத்து கொள்ளாததால் தான் சன் டிவிக்கு சென்றுவிட்டார் என்றும் பயில்வான் பேசி இருந்தார்.

அதற்கு வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்து தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

“பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி தரக்குறைவாக வீடியோ போட்டிருக்கிறார். அவரை எல்லோரும் கமெண்டில் திட்டுகிறீர்கள். ”

“தயவு செய்து திட்டி மெசேஜ் போடாதீங்க. அவர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. பாவம் அவர் பணத்திற்காக பண்ணுறாரா, மனநிலை சரியில்லையா என தெரியவில்லை. அவர் ஏதோ பொழப்புக்காக பண்ணுறாரு. அதை பண்ணிட்டு போகட்டும்.”

“அந்த சாணியில் நாம் கல் எறிந்து, அந்த சாணி நம் முகத்தில் வீச வேண்டாம் என பார்க்கிறேன். உண்மை இல்லாமல் செய்யும் பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வலம்வந்துகொண்டிருக்கிறது. இன்று என்னை பற்றி வந்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் இது ரொம்ப சாதாரணம்” என வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...