2 22
சினிமாபொழுதுபோக்கு

விக்ரமின் வீர தீர சூரன் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

Share

விக்ரமின் வீர தீர சூரன் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தை இயக்குநர் அருண் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.Latest Tamil movies

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து நேற்று முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த தகவலில், இப்படம் ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸாகும் என கூறினார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...