உங்கள் அருகில் நாங்க குழந்தைகள் தான்.. விஜய் பற்றி பேசிய ஹிந்தி ஹீரோ
நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர். ஒரு படத்திற்கு 200 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்குகிறார். அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதிப்பதால் தற்போது நடித்து வரும் தளபதி 69 படம் தான் அவரது கடைசி என அவரே அறிவித்துவிட்டார்.
விஜய் நடித்து பெரிய ஹிட் ஆன தெறி படத்தினை தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றார் அட்லீ.
அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதனால் படம் ஹிட் ஆக வாழ்த்து தெரிவித்து விஜய் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
விஜய்யின் பதிவுக்கு நன்றி கூறி இருக்கும் வருண் தவான், “நன்றி தளபதி விஜய் சார். எப்போதும் உங்கள் அருகில் நாங்கள் குழந்தைகள் தான்” என குறிப்பிட்டு இருக்கிறார்.