tamilnaadi 121 scaled
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவால தான் என் வாழ்க்கையே சீரழிஞ்சது… உலகம் இத சொல்லாது.! உண்மையை உடைத்த வனிதா

Share

அப்பாவால தான் என் வாழ்க்கையே சீரழிஞ்சது… உலகம் இத சொல்லாது.! உண்மையை உடைத்த வனிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை காட்டி அசத்தியிருந்தார். மேலும் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அடித்தார்.

இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதில் இவரது திருமண வாழ்க்கையும் அடங்கும்.

பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரும் நிலைக்கவில்லை, அவர் உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து படங்களில் பிஸியான வனிதா, அடுத்து தனது மகளையும் பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கில் பிக் பாஸ் சீசன் 7க்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், வனிதா தனது தந்தை விஜயகுமார் குறித்து பேசிய வீடியோ ஒன்றும் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில்,

எனது அப்பா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், எனது மகள்கள் எப்படி என்று ஒவ்வொரு பெயரையும் சொல்லி விளக்கமளித்தார். அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என்று பேசியிருந்தார். நான் அந்த வீடியோ குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பேன்.

என் பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என்னை தவிர மற்ற பிள்ளைகளின் பெயரை என் அப்பா சொன்னார். அவர் வேண்டுமெனில் என்னை பிள்ளை என்று சொல்லாமல் இருக்கலாம், என் பெயரை சொல்லாமல் விடலாம். அனால் உலகம் அப்படி சொல்லாது. நான் எப்போதும் அவரின் பிள்ளை தான்.

எனக்கு திருமணமான புதிதில் என் பெயரை என்ன மாதிரி குறிப்பிட வேண்டும் என்று கேட்க, நான் வனிதா விஜயகுமார் என்றேன். அதனால் தான் இப்போதும் எனக்கு அந்த பெயர் தொடர்கிறது.

ஒருவேளை வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால், தொடர்ந்து எத்தனை முறை எனது பெயர் மாறியிருக்கும் என்று சிரித்துக்கொண்டே வனிதா தெரிவித்தார்.

மேலும், என் அப்பா பேச்சை கேட்ட ஒரே பிள்ளை என்றால் அது நான் தான். அவரால் தான் என் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு. என்னுடைய வாழ்க்கை எப்படி எப்படியோ இருந்திருக்கும். ஆனால் அவரின் பேச்சை கேட்டதால் தான் என் வாழ்க்கை இந்தளவுக்கு மாறி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தியாவின் திருமணத்திற்கு வனிதாவை அழைக்காமல் ஒதுக்கி வைத்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...