கவிஞர் வைரமுத்து பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்

Vairamuthu twitter 290521 1200x800

தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன்.

அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

#vairamuthu #cinema

 

Exit mobile version