download 16 1 4
சினிமாபொழுதுபோக்கு

தனுஷ் கூட்டணியில் இணையும் வடிவேலு!

Share

தனுஷ் கூட்டணியில் இணையும் வடிவேலு!

2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்‘ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாரிசெல்வராஜ் -தனுஷ் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளதுஇப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கூட்டணியில் நடிகர் வடிவேலு இணையவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ் உடன் வடிவேலு முதல் முறையாக இணையவுள்ளார். இதற்கு முன்பு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் சில நாட்கள் வடிவேலு நடித்த நிலையில் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகி, விவேக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...

Untitled 25
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட்டில் அடுத்த அதிரடி: சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா! ‘வாரிசு’ இயக்குனர் இயக்கும் புதிய படம்

தென்னிந்திய திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப்...