23 64bcfacfeddee
சினிமாபொழுதுபோக்கு

யூடியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது.. இதுவரை யாரும் செய்யாத தவறா?

Share

யூடியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது.. இதுவரை யாரும் செய்யாத தவறா?

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையில் சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் அவர் சில மாதங்கள் கழித்து ஜாமினில் வெளி வந்தார் என்பதும் இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் செல்போன் பயன்படுத்தியபடி காரை இயக்கியதாக புகார் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி அவர் கார் ஓட்டியதாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை அண்ணா நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் செல்போன் பேசியபடி கார் ஓட்டி செல்கின்றனர் என்றும் ஆனால் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் டிடிஎஃப் வாசன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் நெட்டிசன் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பகிரங்கமாக அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக முதலில் சொல்லி, அதன் பின் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறிய நிலையில், டிடிஎஃப் வாசன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதை பார்க்கும்போது இர்பானுக்கு ஒரு நீதி, டிடிஎஃப் வாசனுக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியையும் நெட்டிசன் எழுப்பி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
09 5
சினிமாபொழுதுபோக்கு

‘சிக்கினி சமேலி’ பாடல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயா கோஷல்: விளக்கம் என்ன?

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷல், கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில்...

10 5
சினிமாபொழுதுபோக்கு

குழந்தை நட்சத்திரத்திலிருந்து பன்மொழி நாயகியாக சாரா அர்ஜுனின் வெற்றிப் பயணம்: நெகிழ்ச்சியில் இயக்குனர் விஜய்!

தமிழ் சினிமாவில் ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ போன்ற திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதை வென்றவர்...

07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...