நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எழும் ஊகங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், திருமணத்தை மீறிய உறவு குறித்துக் குறிப்பிட்டுள்ள கருத்துகள், நெட்டிசன்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் நடிகை திரிஷாவின் பெயர் அடிபட்டு வரும் சூழலில், கடந்த 2015-ஆம் ஆண்டு திரிஷாவின் நிச்சயதார்த்தம் ரத்தான விவகாரம் குறித்த பழைய பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
அன்றைய பேட்டியில், தமக்குத் திருமணம் நிச்சயமான நபர் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என நிபந்தனை விதித்ததாகவும், அதற்குத் தான் உடன்படவில்லை என்றும் திரிஷா வெளிப்படையாகக் கூறியிருந்தார். “என் கர்ப்பம் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பதைத் தடுக்கும்; கடைசி மூச்சு வரை நடிப்பேன்” என அவர் உறுதியாகத் தெரிவித்திருந்த கருத்துகள், தற்போது விஜய் விவகாரத்துடன் இணைத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தத் தெளிவான நிலைப்பாடுதான், திருமண வாழ்க்கையிலும் அவர் இத்தகைய கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பார் என்ற கோணத்தில் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒருபுறம் வதந்திகள் பரவி வரும் நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாய் ‘இஸ்ஸி கிருஷ்ணன்’ தூங்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் “Currently chasing cats in dreamland” என்று அவர் பதிவிட்டுள்ள கேப்ஷன், சர்ச்சைகளுக்கு விடை தேடும் ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. எழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தும் வகையில் அவர் இப்பதிவை இட்டுள்ளதாகத் திரைத்துறையினர் கருதுகின்றனர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இத்தகைய சிக்கல்கள் பொதுவெளியில் பேசப்படும்போது, அது குறித்த ஆதாரமற்ற வதந்திகள் திரையுலகப் பிரபலங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். விஜய்-சங்கீதா விவாகரத்து மனு மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களின் தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கங்களும் வராத வரை இவை வெறும் ஊகங்களாகவே நீடிக்கின்றன.

