சோப் விளம்பரத்தில் முன்னணி நடிகருடன் நடிகை திரிஷா

24 664c1dbf34c4b

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவர் 15 ஆண்டுகளாக முன்னணி நாயகி அந்தஸ்தில் இருக்கிறார்.

சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு 96 மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மீண்டும் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று கொடுத்தது.

விடாமுயற்சி, ராம் பார்ட் 1, விஸ்வம்பரா, தக் லைஃப் என திரிஷா கைவசம் பல படங்கள் உள்ளன. மேலும் விஜய்யின் Goat திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாராம்.

திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் திரிஷா நடிப்பதை நாம் அறிவோம். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் சோப் விளம்பரத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் திரிஷாவுடன் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.

அதுவும் சிவகார்த்திகேயன் திரையுலகில் பிரபலமாவதற்கு முன் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version