tamilni 238 scaled
சினிமாபொழுதுபோக்கு

அனுஷ்கா ஷெட்டி வாய்ப்பை தட்டி பறித்த த்ரிஷா ?

Share

அனுஷ்கா ஷெட்டி வாய்ப்பை தட்டி பறித்த த்ரிஷா ?

நடிகை த்ரிஷா நாற்பது வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக இருக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு பிறகு அவர் விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ கமல்ஹாசன் உடன் ‘தக்ஃலைப்’, மோகன்லாலுடன் ’ராம் மற்றும் நிவின் பாலுடன் ’ஐடென்டிட்டி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படமான ‘விஸ்வாம்பரா’ என்ற படத்தில் த்ரிஷா தான் நாயகி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த படத்தில் முதலில் சிரஞ்சீவியுடன் நடிக்க அனுஷ்கா ஷெட்டியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் திடீரென த்ரிஷா தரப்பினர் அனுஷ்காவின் வாய்ப்பை தட்டி பறித்து த்ரிஷாவுக்கு வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

இதற்கு ஒரே காரணம் இந்த படத்திற்காக 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் படக்குழுவினர் கேட்டதாகவும் அதற்கு த்ரிஷா ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. அஜித் விஜய் போன்றவர்களுடன் நடிக்கும்போது கூட மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுக்காத த்ரிஷா, மெகா ஸ்டார் உடன் நடிப்பதற்காக மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஒரு போர் வீரராக நடிக்கும் நிலையில் த்ரிஷாவும் சில ஸ்டண்ட் காட்சியில் நடிக்கவிருப்பதால் குதிரையேற்றம், களரிக்கலை உள்ளிட்டவற்றை பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...