இணையத்தில் லைரலாகும் திரிஷா, சித்தார்த் வீடியோ!

f 1

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடைபெற்றது. இதில், ‘ஆயுத எழுத்து’ படத்தில் இடம்பெற்ற ‘யாக்கை திரி காதல் சுடர்’ பாடலை மேடையில் இருந்த கலைஞர்கள் பாடினார்கள்.

அப்போது திரிஷா மற்றும் சித்தார்த் இருவரும் அந்த பாடலுக்கு இருந்த இடத்தில் இருந்து உற்சாகமாக நடனமாடி ரசித்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#Trisha #Siddharth

 

Exit mobile version