சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ப்ளூ ஷர்ட்டை ஆட்டைய போட்ட த்ரிஷா.. வசமாக சிக்கிய போட்டோ? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

tamilnig 5 scaled
Share

விஜய்யின் ப்ளூ ஷர்ட்டை ஆட்டைய போட்ட த்ரிஷா.. வசமாக சிக்கிய போட்டோ? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் எத்தனை நடிகைகள் போட்டி போட்டு முட்டிக்கொண்டாலும், புதிதாக வந்தாலும் நடிகை த்ரிஷாவுக்கு என்றே தனி இடமுண்டு. அவருக்கான மவுஸ் என்றுமே குறைந்ததில்லை.

நடிகர் விஜயுடன் எத்தனை நடிகைகள் நடித்திருந்தாலும் அது த்ரிஷாவுக்கு ஒப்பாக இருக்காது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி அழகாக இருந்தது.

கில்லி படத்திலும் தனலட்சுமி ஆக நடித்த த்ரிஷாவும் வேலுவாக நடித்த நடித்த விஜய்யும்இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அத்துடன் குருவி படத்திலும் இவர்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.

பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ரி கொடுத்த திரிஷா, தற்போது எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதன்படி அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக்லைஃப் படம் என பெரிய நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர விஜயின் கோட் படத்திலும் கேமியா தோற்றத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் விஷ்வபரா என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில், சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் கீதா கீதாவாணி ஆகியோருடன் த்ரிஷா அடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது குறித்த புகைப்படத்தில் த்ரிஷா டெனிம் சேர்ட் அணிந்திருக்கிறார். பொதுவாக விஜய் வெளியில் வரும் போது டிமைன்ட் ப்ளூ சேர்ட் தான் அதிகமாக அணிந்து வருவார்.

இவ்வாறான நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் , ஒருவேளை விஜய் தனது சேட்டை த்ரிஷாவுக்கு பரிசாக கொடுத்திருப்பாரோ இல்லை த்ரிஷா ஆட்டைய போட்டு இருப்பாரோ என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...