tamilni 413 scaled
சினிமாபொழுதுபோக்கு

கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமல்ல.. நாயகியே அவர் தானா? சினேகா, லைலா அதிர்ச்சி..!

Share

கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமல்ல.. நாயகியே அவர் தானா? சினேகா, லைலா அதிர்ச்சி..!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடனம் ஆடியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் வெறும் நடனம் மட்டும் ஆட வில்லை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்திருக்கும் நிலையில் நெகட்டிவ் கேரக்டர் ஒரு கேங்க்ஸ்டர் என்று கூறப்படுகிறது. இந்த கேங்ஸ்டர் கூட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நபர் தான் த்ரிஷா என்றும் ஒரு சில திருப்புமுனை காட்சிகள் அவருக்கு இந்த படத்தில் இருப்பதாகவும் அதன் பிறகு தான் ஒரு பாடலிலும் அவர் நடனமாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் அவருக்கு ஒரு நாயகிக்கு உள்ள முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் தற்போது த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டுமின்றி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தகவல் மற்ற நடிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அஜித் உடன் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா, கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’, மோகன்லால் உடன் ‘ராம்’, நிவின் பாலியுடன் ’ஐடெண்டிட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது த்ரிஷா, ஒரு வெப் தொடரில் நடித்து முடித்து உள்ளதாகவும் ’பிருந்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது. இந்த வெப் தொடரில் த்ரிஷா, போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் இந்த வெப் தொடர் மிகச் சிறப்பான முறையில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...

Keerthy Suresh white saree 4 1738660296537 1738660296714
சினிமாபொழுதுபோக்கு

துபாய், அமெரிக்கா போல இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டங்கள் மாற வேண்டும்” – நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்!

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா...

125086256
சினிமாபொழுதுபோக்கு

தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்...