இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன் டிரெக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிக்கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடர் போட்டியிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் உத்தரகாண்ட் பகுதியிலுள்ள ரிஷிகேஷில் டிரெக்கிங் சென்றுள்ளார். மேலும் அங்குள்ள தயானந்த கிரி ஆசிரமத்தில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனமும் செய்துள்ளார்.
தனது செல்ல மகள் வாமிகாவை முதுகில் சுமந்துகொண்டு விராட் கோலி அவர்கள் ரிஷிகேஷ் பகுதியில் டிரெக்கிங் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன. கூடவே தயானந்த கிரி ஆசிரமத்தில் தனது மனைவி அனுஷ்காவுடன் இணைந்து அவர் சுவாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு கடந்த 2017 டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் முதன்முறையாகத் தனது செல்ல மகள் வாமிகாவை அவர் சுமந்துகொண்டு டிரெக்கிங் சென்றுள்ள காட்சிகள் பார்ப்பதற்கு படு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தற்போது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் விராத் கோஹ்லி ட்ரக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்த புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#cricket #cinema