உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியல் வெளியீடு: ஹார்லி குயின் மார்கோட் ராபி முதலிடம்!

MediaFile 5 2

2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டொப் 10 பெண்கள் பட்டியலை பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்டது.

அந்த பட்டியலில் உலகின் மிக அழகான பெண்ணாக ‘சூசைட் ஸ்குவாட்’, ‘பார்பி’, தி வொல்ப் ஆப் வால் ஸ்டிரீட்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவரும், ‘ஹார்லி குயின்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான மார்கோட் ராபி முதலிடம் பிடித்திருக்கிறார்.

இரண்டாம் இடத்தை அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லியும், மூன்றாம் இடத்தை தில்ரபா தில்முராத்தும், நான்காம் இடத்தை கொரியா நடிகை நான்சி மெக்டோனியும் பிடித்துள்ளனர்.

5-ம் இடத்தை பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் பிடித்துள்ளார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டொப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான்.

ஹனியா அமீர், ஜூலியா பட்டர்ஸ், மெக்கென் கிரேஸ், குளோ கிரேஸ் மோரெட்ஸ், ஏரியல் வின்டர் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

Exit mobile version