தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி வசூல் படங்கள் கொடுத்த ஒரே நடிகை.. யார் தெரியுமா

5 2

ஒரு திரைப்படத்தின் வசூல்தான் அப்படத்தின் வெற்றியை கமர்ஷியலாக தீர்மானிக்கிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு படம் ரூ. 500 கோடி, ரூ. 1000 கோடி அடிக்க வேண்டும் என்கிற இலக்கை வைத்துக்கொண்டுதான் பலரும் படமே எடுக்கிறார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 500+ கோடி படங்கள் கொடுத்த நாயகியாக ஒருவர் இருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை, நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாதான். அனிமல் ரூ. 800+ கோடி, புஷ்பா ரூ. 1800+ கோடி, சாவா ரூ. 700 – ரூ. 800 கோடி என ராஷ்மிகாவின் நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த மூன்று திரைப்படங்களும் உலகளவில் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது.

ராஷ்மிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தமா. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது. இப்படம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது. இப்படமும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Exit mobile version