பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

DSC 4313

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை இரவு தொடங்கப்பட இருக்கும் நிலையில் இன்று இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து இதுவரை 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த 8 போட்டியாளர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

 

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே செல்பவர் ஜிபி முத்து. நெல்லையை சேர்ந்த இவர் டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளஙக்ளில் பிரபலம்.

 

 

இதனை அடுத்து இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் அசீம் சென்றுள்ளார்.

 

 

இந்த நிலையில் மூன்றாவது போட்டியாக இசைக் கலைஞரான அசல் கொலார் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்கிற பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

 

 

நான்காவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவின் கணேசன் சென்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதனை அடுத்து 5வது போட்டியாளராக நடன இயக்குனர் ராபர்ட் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இவர் பல பிரபல நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

 

 

பிக்பாஸ் வீட்டுக்குள் 6வது போட்டியாளராக மாடல் அழகி ஷெரினா சென்றுள்ளார். சூப்பர் மாடலான இவர் இந்த சீசனில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பிக்பாஸ் வீட்டிற்குள் 7வது போட்டியாளராக கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி பிக்பாஸ் சென்று உள்ளார்.

 

 

இதனை அடுத்து 8வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் ஏடிகே சென்றுள்ளார். ராப் பாடகரான இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடல் படத்தில் இடம்பெற்ற பாடல், ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

இனி அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் குறித்து இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்.

 

#biggboss

Exit mobile version