அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

Share
35 1
Share

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.

துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய், அழகுசாதனத் தயாரிப்பு, தோல் பராமரிப்பு, வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுகிறது. துளசியின் ஆரோக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மன அழுத்தத்தை போக்கும் துளசி துளசியானது மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். எனவே, ஒரு நபர் மன அழுத்தம் அல்லது கவலையை உணரும்போது ஒரு கப் துளசி டீயை பருகினால், புத்துணர்ச்சி பிறக்கும்.

2. தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் துளசியில் நீண்ட காலமாக அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.மேலும் இவை ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

3. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது துளசி செடியானது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.அதனால் அது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

4.உடல் எடையை குறைக்க உதவுகிறது துளசி ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைகிறது.இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது.இது உடலின் கொழுப்பு எரியும் செயல்முறையை மேலும் துரிதப்படுத்துகிறது.

5.சிறுநீரக கற்களை கரைக்கிறது துளசி ஒரு சிறந்த நச்சு எதிர்ப்பு பொருள்.எனவே, சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அரு மருந்தாகும்.சிறுநீரக கற்களுக்கு காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.

6. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது துளசி தேநீர் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு இது மிகவும் விரும்பப்படும் மூலிகை டீகளில் ஒன்றாகும்.இந்த மூலிகை டீ நீரழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

7. பல் மற்றும் வாய் ஆரோக்கியம் பல் குழி என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொதுவான பல் பிரச்சனையாகும். நல்ல செய்தி என்னவென்றால், துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை வாயில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.

8. தோல் மற்றும் முடி நன்மைகள் துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.இது வயது முதிர்வு அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது.இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.

9. சரும பராமரிப்பு துளசி பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறைகள் மற்றும் முகப்பருவைப் போக்க வல்லது.இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் முகச்சுறுக்கங்களை போக்கி சரும பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.

10.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது துளசியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு கூறுகள் உள்ளன.அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.துளசி இலைகள் அல்லது துளசி டீயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 

Share
Related Articles
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...