tamilnif scaled
சினிமாபொழுதுபோக்கு

’தக்லைஃப்’ படத்தில் இணைகிறாரா சிம்பு? மணிரத்னத்தின் வேற லெவல் பிளான்..!

Share

’தக்லைஃப்’ படத்தில் இணைகிறாரா சிம்பு? மணிரத்னத்தின் வேற லெவல் பிளான்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் சிம்புவை இணைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’தக்லைஃப்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என மணிரத்ணம் ஆலோசனை செய்து கொண்டிருந்த நிலையில் நானி நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சிம்புவிடம் 15 நாள் கால் சீட் வாங்கினால் இந்த படத்தில் அவருடைய கேரக்டரை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. சிம்புவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ’எஸ்டிஆர் 48’ படத்தை தொடங்குவதற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விடலாம் என்று கூறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

கமல்ஹாசனும் நேரடியாகவே சிம்புவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கிட்டத்தட்ட சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விடுவார் என்றே கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ என்ற படத்தில் சிம்பு ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அந்த கேரக்டர் அவருக்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயகும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு இணை வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...