ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Kaathu Vaakula Rendu Kadhal

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடுவது என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு படத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

இதேபோல ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள தெலுங்கு ரீமேக் படமான ஓ மணப்பெண்ணேவும் ஹாட் ஸ்டாரின் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Exit mobile version