இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் ராஜராஜ சோழனின் பெருமையை குறிக்கும் வகையிலான படம் என்பதால் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை சோழர்களின் தலைநகராக இருந்த தஞ்சையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஜூலை 7ம் திகதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூலை இறுதியில் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் டீசர் ரிலீஸ் ஆகும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Cinema
Leave a comment