இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ரவீனா தாண்டன். தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரான கே.ஜி.எப் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகை ரவீனா தாண்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பல கிளம்பின.
பத்ம ஸ்ரீ விருது பெரும் அளவிற்கு ரவீனா என்ன செய்தார் என கமெண்டுகள் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரவீனா தாண்டன் கூறியதாவது, என்னை விமர்சிப்பவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கிறார்கள்.
அதற்கு பின்னால் இருக்கும் எனது கடுமையான உழைப்பு அவர்களுக்கு தெரியவில்லை. நான் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவில்லை.
பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்களில் கூட நடித்தேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததை சிலர் விமர்சித்தாலும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்தான் அதிகம் என்று கூறினார்.
#cinema