யோகிபாபுவுக்கு தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

318932233 1847206375638986 4684540715508453105 n

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், யோகி பாபுவுக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு, “இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி” என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

#Cinema

Exit mobile version