விஜய் சாருக்கு வாய்ப்பு கொடுங்க.. நானும் அரசியலுக்கு வர்றேன்: வாணிபோஜன்

tamilni 219

விஜய் சாருக்கு வாய்ப்பு கொடுங்க.. நானும் அரசியலுக்கு வர்றேன்: வாணிபோஜன்

சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் நானும் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளேன் என்றும் நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது குறித்து கமலஹாசன், ரஜினிகாந்த், சீமான் உள்பட பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை வாணி போஜன் விஜய் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், என்னை கேட்டால் விஜய்க்கு அரசியலில் ஒரு முறை மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பதை நமக்கு தெரிய வரும்.

மேலும் ’செங்களம்’ என்ற வெப் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்தது, அந்த ஆசை இப்போதும் எனக்கு உள்ளது என்று தெரிவித்தார். இதனை அடுத்து அவர் விஜய் கட்சியில் சேர போகிறாரா என்ற கேள்விக்கு ’அப்படி எல்லாம் இல்லை, விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கூறினேன், ஆனால் அதே நேரத்தில் எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது. அதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் அரசியல் கட்சியில் ஒரு சில திரை உலக பிரபலங்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வாணி போஜன் அவரது கட்சியில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version