இந்நிலையில் இன்றைய தினம் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில் நேற்று நள்ளிரவு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்போஸ்டர் வெளியான நேரம் முதல் சிறந்த வரவேற்பை பெற்று வருவதோடு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.
அந்தவகையில் இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்புறத்தில் ஒரு கை மேலோங்கி இருப்பது போன்று உள்ளது. இதனால் அந்த கை யாருடையது? இந்த போஸ்டர் சொல்ல வருவது என்ன என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு இடையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.