tamilni 268 scaled
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யால் ஏமாந்து போன அட்லி.. அஜித்திடம் சரணடைய முடிவா?

Share

விஜய்யால் ஏமாந்து போன அட்லி.. அஜித்திடம் சரணடைய முடிவா?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க அட்லி எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அவர் வாக்குறுதி கொடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து ஜவான் படத்தை முடித்த பிறகு ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படம் உலகம் முழுவதும் 3000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று அட்லி ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்த படத்திற்கான கதை எழுதும் பணியில் அட்லி இருந்த நிலையில்தான் திடீரென விஜய் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்தது அட்லிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

விஜய் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டதால் அட்லி படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்பதால் ஷாருக்கான் மற்றும் விஜய்க்காக அவர் எழுதிய கதையில் விஜய் நடிக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்க அஜித்திடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ஒருவேளை அஜித் ஒப்புக் கொண்டால் ஷாருக்கான் மற்றும் அஜித் நடிக்கும் படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் அஜித் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இணைவார்களா? அந்த படத்தை அட்லி இயக்குவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...