tamilni 490 scaled
சினிமாபொழுதுபோக்கு

இலங்கையே வேண்டாம்.. வெங்கட்பிரபுவிடம் கட் & ரைட்டாக சொன்ன விஜய்

Share

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சி இலங்கையில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதற்காக இலங்கை சென்று லொகேஷன் பார்க்கும் பணியையும் இயக்குனர் வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் இலங்கைக்கு வந்தால் அவரை வரவேற்க ஒரு கூட்டமும் அதே நேரத்தில் அவருக்கு கண்டனம் தெரிவிக்க ஒரு கூட்டமும் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் வெங்கட் பிரபுவை அழைத்த விஜய், இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்து விடலாம் என்றும் இலங்கைக்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்றும் கட் & ரைட்டாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விஜய் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அரசியலில் நுழைந்த இந்த நேரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் எதையும் செய்ய வேண்டாம் என்பதற்காக இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என விஜய் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன், விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் விஜய் இலங்கைக்கு படப்பிடிப்புக்கு வந்தால் அவரை சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த சந்திப்பு நடந்தால் தமிழகத்திலும், இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் தான் இந்த தர்ம சங்கடத்தை தவிர்க்கவே இலங்கை படப்பிடிப்பை விஜய் ரத்து செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தான் முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டு இருந்த தற்போது அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தை தேர்வு செய்ய வெங்கட் பிரபு குழுவினர் தீவிர பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...

124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார்...