‘தளபதி 67’ வில்லன் அர்ஜூனுக்கு கோடிகள் சம்பளம்?

ezgif 2 0a78abd5d7

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த படத்தில் கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த படத்தின் இன்னொரு வில்லனான சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் என்றும், அதேபோல் கௌதம் மேனன், நிவின்பாலி ஆகியோர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ’தளபதி 67’ படத்தின் சம்பள பட்ஜெட் 200 கோடியை தாண்டும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர், லடாக் மற்றும் வெளிநாடு ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Exit mobile version