மீண்டும் சிம்பு குரலில் தெலுங்கு பாடல்!

Simbu FB

இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’18 பேஜஸ்’. இந்த படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிம்பு ‘டைம் இவ்வா பிள்ளா’ என்ற பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதன் முழுமையான பாடல் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய ‘புல்லட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version